மின் கம்பிகள் கழன்று விழுந்ததில் இரண்டு இளைஞர்கள் பலி

Report Print Steephen Steephen in சமூகம்

மாத்தளை - ஹத்தமுனகால பிரதேசத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த சிறிய லொறி ஒன்றின் மீது மின் கம்பிகள் கழன்று விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது. உயிரிழந்த இளைஞர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து சரியான தகவல்களை அறிய பொலிஸார் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.