யானையின் தாக்குதலினால் இளைஞர் படுகாயம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திம்பிரியத்தாவெல பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்ற நிலையில் காட்டுக்கு தேன் எடுப்பதற்காக இன்று காலை சென்றபோது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த யானையின் தாக்குதலினால் அதே இடத்தைச் சேர்ந்த எம்.எம்.முர்சித் மௌலவி (26 வயது) இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.

இவர் ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.