இலங்கையில் வான்பரப்பில் சுற்றித் திரியும் மர்ம உயிரினம்! உறுதி செய்த வானியல் பேராசியர்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையின் வான்பரப்பில் மர்மான உயிரினம் ஒன்று சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தெளிவாக அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்றே இவ்வாறு சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்த காணொளி ஒன்றும் கிடைத்துள்ளது. எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தொட, திருகோணமலை, நுவரெலியா உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.