பாவனைக்கு உதவாத கிழங்கு, வெங்காயம் மீட்பு: இருவர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - அக்போபுர பகுதியில் பாவனைக்கு உதவாத கிழங்கு மற்றும் வெங்காயம் என்பவற்றுடன் இரண்டு பேரை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ள பகுதியிலிருந்து லொறி ஒன்றில் கொண்டுவரப்பட்ட வெங்காயம் 2 ஆயிரம் கிலோகிராம் மற்றும் கிழங்கு போன்றவற்றை சோதனையிட்டபோது அவை பாவனைக்கு உதவாத பொருட்கள் என கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் இருவரையும் நேற்றிரவு கைது செய்ததாகவும் இதேவேளை பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 45 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.