கடத்தப்பட்ட மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிரிழந்த தந்தைக்கு கஜேந்திரகுமார் அஞ்சலி

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் நேற்று முன்தினம் மரணமடைந்திருந்தார்.

வவுனியா - கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது 70) என்ற முதியவரே வீட்டில் உள்ள மரமொன்றில் ஏறியபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த முதியவரின் வீட்டிற்கு நேற்று விஜயம் செய்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவருக்கான இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

குறித்த முதியவர் காணாமல்போன தனது மகனின் உண்மை நிலையை தெரிவிக்குமாறு கோரி, 1200 நாட்களிற்கும் மேலாக வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.