நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடியவர்களுக்கு விளக்கமறியல்

Report Print Varunan in சமூகம்
50Shares

தென்னந்தோப்பு ஒன்றில் நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிய குற்றச்சாட்டில் கைதான இரு சந்தேகநபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் நீர் பாய்ச்சுவதற்காக பொருத்தப்பட்டிருந்த ரூபா 18000 பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம் கடந்த 15.6.2020 அன்று களவாடப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினால் கடந்த வியாழக்கிழமை நிந்தவூர், அட்டப்பளம் பகுதியை சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் கைதானவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் களவாடப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் கைதான சந்தேகநபர்கள் இன்று சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஜுலை மாதம் 7ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.