ஓமந்தையில் கஞ்சாவுடன் இளைஞரொருவர் கைது

Report Print Theesan in சமூகம்
56Shares

வவுனியா - ஓமந்தை பகுதியில் இளைஞரொருவரிடமிருந்து இன்று பிற்பகல் 1.707 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பிராந்திய மது ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓமந்தை பர்நாட்டகல் குளப் பகுதியில் சென்ற இளைஞரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அவரது உடமையிலிருந்து குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது ஓமந்தை - பறநாட்டங்கல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா பிராந்திய மது ஒழிப்புபிரிவு பொலிஸார், ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் சந்தேகநபரை நாளைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.