இரணைமடுக்குளம் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட் டவர்களை கைது செய்ய நடவடிக்கை

Report Print Yathu in சமூகம்
26Shares

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டை அண்மித்த பகுதி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளால் பல்வேறு இடங்களிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதாக பொலிஸார் மற்றும் துறைசார் அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டிருந்தபோதும் தொடர்ந்தும் சடடவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் இன்று பிற்பகல் இரணைமடு நீர்ப்பாசனப் பொறியியலாளர் செந்தில்குமரன் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட களவிஜயத்தின் போது இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டை அண்மித்த பகுதியில் சிலர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தொலைபேசி, சவள் உள்ளிட்ட பொருட்களை கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்குச்சென்ற கிளிநொச்சிப் பொலிஸார் மேற்படி சான்றுப் பொருட்களை மீட்டுள்ளதுடன் இப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதுடன் சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.