கஞ்சிபானி இம்ரான், வெலே சுதா உள்ளிட்டவர்கள் பூஸ்ஸா முகாமில் உணவு தவிர்ப்பு போராட்டம்?

Report Print Ajith Ajith in சமூகம்
70Shares

களுத்துறை - பூஸ்ஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு மற்றும் போதைவஸ்து கடத்தல்காரர்கள் 15 பேர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முதல் அவர்கள் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கஞ்சிபானி இம்ரான், வெலே சுதா மற்றும் ஸியாம் போன்ற போதைவஸ்து கடத்தல்காரர்கள் உள்ளடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.