இலங்கையில் மீண்டும் ஒரு தனியார் மருத்துவப்பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது
மருத்துவ பீட மாணவர்களின் நடவடிக்கைக்குழு இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று இலங்கை மருத்துவ சபைக்கு முன்னால் நடத்தியது.
மாலபே தனியார் மருத்துவக்கல்லூரிக்கு பின்னர் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கல்லூரி தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆபத்தானவை என்று மருத்துவ பீட மாணவர்களின் நடவடிக்கைக்குழுவினர் தெரிவித்தனர்