களுவாஞ்சிக்குடி பகுதியில் பெண்ணொருவர் கொலை! கணவர் கைது

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் வசிக்கும் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனுக்கும்,மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக எனது மகளை அவரது கணவர் கொலை செய்துள்ளதாக குறித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து களுவாஞ்சிக்குடி பொலிஸாரும், மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ் பிரிவும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.