மீராவோடை புலியடி களப்பில் நீராடச் சென்ற இளைஞன் பலி

Report Print Steephen Steephen in சமூகம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடை புலியடி களப்பில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

தந்தை மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து நீராடச் சென்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்போது இமாம் வீதி பீராந்தரசேனை பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.