திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி அருவிக்குள் சறுக்கி விழுந்துள்ளனர் - இளைஞனை காணவில்லை

Report Print Steephen Steephen in சமூகம்

லக்கலை பொலிஸ் பிரிவில் நகல்ஸ் பகுதியில் உள்ள சேர அருவிக்கு அருகில் புகைப்படம் எடுக்க முயற்சித்த திருமணம் நிச்சயிக்கபபட்டிருந்த ஜோடி அருவியில் சறுக்கி விழுந்ததில் இளைஞர் காணாமல் போயுள்ளார்.

அருவியில் சறுக்கி விழுந்த யுவதியை நேற்று மாலை காப்பாற்றியதாக லக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான இளைஞனே காணாமல் போயுள்ளார். இவர்கள் குருணாகல் பிரதேசத்தில் இருந்து புகைப்படம் எடுப்பதற்காக லக்கலை ரிவஸ்டன், நகல்ஸ் பிரதேசங்களுக்கு வந்துள்ளனர்.

ரிவஸ்டன் பிரதேசத்தில் இருந்து 12 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இலுக்கும்புர சேர ஹெல்ல என்ற பிரதேசத்தில் இருக்கும் அருவிக்கு அருகில் புகைப்படம் எடுத்த போது இளைஞம், யுவதியும் திடீரென சறுக்கி தண்ணீரில் விழுந்துள்ளனர்.

அப்போது அந்த இடத்திற்கு வந்த ஒருவர் யுவதியை காப்பாற்றியுள்ளார். எனினும் இளைஞன் காணாமல் போயுள்ளதுடன் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிப்பதற்காக கடற்படையின் சுழியோடிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் லக்கலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.