நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் நிலைய பணியாளர்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

மத்திய அஞ்சல்துறை பரிவர்த்தனை மையத்தின் பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அஞ்சல் மூல வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பது தொடர்பான பிரச்சினையை மையப்படுத்தியே இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

முன்னைய சந்தர்ப்பங்களில் வாக்காளர் அட்டைகளை பொதியிடல் மற்றும் விநியோகம் என்பன மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திலேயே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

எனினும் 2020 பொதுத்தேர்தலுக்காக இந்த பணிகள் ஹெவ்லொக் டவுனில் அமைந்துள்ள அஞ்சல் நிலையத்துக்கு மாற்றப்பட்டமையை ஆட்சேபித்தே மத்திய அஞ்சல் பரிவர்த்தனை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.