ஓமானில் இருந்து 288 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் ஓமானில் தங்கியிருந்த 288 இலங்கையர்களை ஏற்றி வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

யு எல் - 206 என்ற விமானம் ஓமானிலுள்ள மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயணிகள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையில் ஹொங்கொங்கில் இருந்து இலங்கைக்கு வரமுடியாத 26 இலங்கையர்கள் நேற்று இரவு 9.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.