வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Report Print Theesan in சமூகம்

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா, டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்கள் விசேட விமானங்களின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்களில் நாடு திரும்பிய 300க்கும் மேற்பட்டோர் வவுனியா வேலங்குளம் மற்றும் பம்பைமடு இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றையதினம் வேலங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 46 பேருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகளின்படி ஒருவருக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது.