காலியில் விகாரையிலிருந்து பிக்கு ஒருவர் சடலமாக மீட்பு

Report Print Ajith Ajith in சமூகம்

காலி- கொஸ்கொட சிறி விஜய தர்மநந்தா பிரிவேனாவின் பௌத்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தர்மநந்தா பிரிவேனாவைச் சேர்ந்த 73 வயதுடைய பிக்குவே இவ்வாறு ஊரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பௌத்த பிக்குவின் உடலம் வெட்டுக்காயங்களுடன் விஹாரையின் வளவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.