மீளத்திறக்கப்படும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் - சுகாதார அமைச்சு அனுமதி

Report Print Ajith Ajith in சமூகம்

Day-Care என்ற பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களை எதிர்வரும் ஜூலை 6ம் திகதியன்று திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் கடந்த மார்ச் முதல் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கபப்ட்டிருந்த நிலையில் பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களை கடும் சுகாதார ஒழுங்கு விதிகளின் கீழ் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்