ரவி கருணாநாயக்கவின் கைது ஆணைக்கு எதிரான இடைக்கால தடையுத்தரவு மனுவுக்கு அடுத்தவாரம் தீர்ப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட்ட கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட கைது ஆணைக்கு எதிரான இடைக்கால தடையுத்தரவைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான தீர்மானம் ஜூலை 7ம் திகதியன்று அறிவிக்கப்படவுள்ளது.

மத்திய வங்கி முறிவிற்பனை மோசடி தொடர்பிலேயே ரவி கருணாநாயக்க உட்பட்ட ஐந்து பேரை கைதுசெய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து சில காலம் தலைமறைவாகியிருந்த குறித்த ஐந்து பேரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு மனுவை தாக்கல் செய்த பின்னர் மன்றில் முன்னிலையாகினர்.

இந்தநிலையில் இன்று குறித்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது தமது தீர்மானத்தை ஜூலை 7ம் திகதி அறிவிப்பதாக நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்.