இலங்கையில் கடுமையாகும் சட்டம்!

Report Print Vethu Vethu in சமூகம்

முகக் கவசம் அணியாத பயணிகள் பயணிப்பதற்கு இடமளிக்கும் பேருந்துகளின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் என மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

அவ்வாறு முகக் கவசம் அணியாமல் பேருந்துகளில் பயணிகளை ஏற்றும் நடத்துனர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவும் நிலையில் பயணிகள் முகக் கவசம் அணிந்து பேருந்துகளில் பயணிப்பது கட்டாயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை அழைத்து செல்ல வேண்டும். அவ்வாறு செயற்படாமல் பேருந்துகளில் தேங்காய் ஏற்றிச் செல்வதனை போன்று பயணிகளை ஏற்றி சென்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

பேருந்துகளில் முகக் கவசம் இல்லாமல் பயணிகளை அழைத்து செல்பவர்களை தேடி பார்ப்பதற்கு வீதி பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.