கொரோனாவை அடுத்து இலங்கையை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மலேரியா நோய் தலைதூக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் 3 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரையில் 13 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வாரம் பதிவாகிய மலேரியா நோயாளிகள் மூவரில் ஒருவர் தம்புளை - பெல்வெஹெர தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இரத்திபுரி பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் மடகஸ்கார் நாட்டில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தப்பட்டவராகும். அவர் தற்போது தம்புளை வைத்தியசாலையில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளதாக மலேரியா தடுப்பு பிரிவினர் இயக்குனர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

மற்றைய மலேரியா நோயாளிகளில் இருவரும் இந்தியாவின் தம்பதிவ யாத்திரைக்கு சென்று திரும்பியவர்களாகும். அவர்கள் இவ்வாறு நாடு திரும்பி 10 மாதங்களின் பின்னர் மலேரியா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

அவர்கள் இருவரும் இரத்தினபுரி - கலவான மற்றும் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.

மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கையை, ஐக்கிய நாடுகளின் சுகாதார பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.