புத்தரின் புனித தந்தத்தை சுமந்து செல்லும் மில்லான்கொட பொடி ராஜா மரணம்

Report Print Ajith Ajith in சமூகம்

கண்டி தலதா மாளிகை எசல பெரஹரா பவனியில் புத்தரின் புனித தந்தத்தை சுமந்து செல்லும் மில்லான்கொட பொடி ராஜா என்ற யானை தமது 70வது அகவையில் இன்று உயிரிழந்துள்ளது.

இந்த யானைக்கு 4 அகவையாக இருக்கும் போது தெஹிவளை விலங்கினச்சாலையில் இருந்து மில்லன்கொட என்பவரால் ஏல விற்பனையின் போது கொள்வனவு செய்யப்பட்டது.

1956 சம்புத்த ஜயந்தி ஆண்டில் இந்த யானை கொள்வனவு செய்யப்பட்டமையால் அதற்கு ஜயந்தி என்ற பெயர் சூட்டப்பட்டது.

எனினும் பொடி ராஜா என்ற பெயரிலேயே இது அழைக்கப்பட்டு வந்தது.