பொலநறுவையில் பிக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

Report Print Steephen Steephen in சமூகம்

பொலநறுவை அரந்தலாவை பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் பௌத்த பிக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்து உயிர் தப்பிய ஆதாயுல்பத்த புத்தசார தேரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். தாக்குதல் சம்பவம் நடந்து 33 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரந்தலாவை பிக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது உயிருடன் இருக்கும் புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் மனுவில் கோரியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த தனக்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு உத்தரவிட வேண்டும் எனவும் தேரர் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர், தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதி கருணா அம்மானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.