கொரோனா தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்று நோயின் மிக மோசமான நிலைமை இன்னும் வரவில்லை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் பல நாடுகள் மீண்டும் அன்றாட சமூக செயற்பாடுகளுக்காக திறக்கப்பட்டுள்ளதை அடுத்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி Tedroa Ghebreyesus தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

தென் கொரியா, சீனா, ஜேர்மனி, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் திட்டங்கள் இருப்பதாக காட்டியுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச ரீதியில் பல நாடுகள் முன்னேற்றங்களை பெற்றிருந்தாலும் வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரமான வைரஸ் முடிவுக்கு வந்து விட்டது என்று எண்ணும் தேவை நம் அனைவருக்கும் உள்ளது.

வழமைப் போல் அன்றாட பணிகளில் ஈடுபடுங்கள். எனினும் கொரோனா வைரஸின் முடிவு இன்னும் நெருங்கவில்லை என்பதே துயரமான யதார்த்தம்.

பல நாடுகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், தொற்று நோய் பரவல் அதிகரிப்பு நிலைமையை எதிர்நோக்கி வருகின்றன. மேலும் சில நாடுகளில் நிலைமை மோசமாக மாறி வருகிறது.

இந்த வைரஸ் பரவும் ஆபத்து அதிகம். பாரதூரமான நிலைமை இன்னும் உருவாகவில்லை. ஏற்பட்டுள்ள நிலைமையின் அடிப்படையில் நாம் மோசமான நிலையை எதிர்நோக்கி வருகின்றோம்.

இந்த வைரசுக்கு எதிராக போராட நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்து தற்போது ஆறு மாதங்கள் கடந்துள்ள போதிலும் அதற்கு எதிராக சிகிச்சை எம்மிடமில்லை. இது இங்குள்ள ஆபத்தான நிலைமை எனவும் Tedroa Ghebreyesus குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 10,436,954 பேர் கொரோனா வைரஸ் தொற்று உள்ளாகியுள்ளனர். அவர்களில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 876 பேர் உயிரிழந்துள்ளனர்.