போதைவஸ்து தடுப்பு பிரிவின் தலைவர் சஞ்சீவ மெதவத்தவை இடமாற்றம் செய்ய கோரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

போதைவஸ்து தடுப்பு பிரிவின் தலைவரான உதவிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ மெதவத்தவை இடமாற்றம் செய்வதற்கான கோரிக்கையை பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன முன்வைத்துள்ளார்.

இந்தக்கோரிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி சஞ்சீவ மெதவத்த போதைவஸ்து தடுப்பு நலன்புரி பிரிவுக்கு மாற்றப்படவுள்ளார்.

எனினும் இன்னும் இதற்கான ஒப்புதலை பொலிஸ் ஆணைக்குழு வழங்கவில்லை என்றும் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த இடமாற்றத்துக்கு ஒப்புதல் வழங்கப்படுமானால் உதவிப் பொலிஸ்மா அதிபர் கே. அபோன்சோ போதைவஸ்து தடுப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.

இதேவேளை போதைவஸ்து கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் போதைவஸ்து தடுப்பு பிரிவின் நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.