பெண்ணொருவரை ஆயுதமுனையில் மிரட்டும் கொள்ளையர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

மொனராகலையில் வீடொன்றுக்குள் புகுந்தவர்கள் பெண்ணை கத்தி முனையில் அச்சுறுத்தி கொலை அச்சுறுத்தல் விடுத்து தங்க சங்கிலியை கொள்ளையடித்துள்ளார்.

அத்துடன் குறித்த பெண்ணை தகாத புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்தச் சம்பவம் எத்திமலை, கொட்டியாகல பிரதேசத்தில் வீடொன்றில் நடந்துள்ளது.

குறித்த பெண் தனது பெற்றோரின் வீட்டிற்கு வருகைத்தந்திருந்த போது இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இரவு 22 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த நபர் இவ்வாறு கொள்ளையடித்ததுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிடுவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

எனினும் இது தொடர்பில் குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


you may like this video