யாழில் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வசமாக சிக்கிய நபர்

Report Print Gokulan Gokulan in சமூகம்

உயிர்க்கொல்லி போதைப்பொருட்களில் ஒன்றான ஐஸ்ஸை கடத்த முற்பட்ட 50 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் இன்று அதிகாலை சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.

சந்தேகநபரிடமிருந்து 2 கோடி ரூபா மதிக்கத்தக்க 2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், 25 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறையிலிருந்து வான் ஒன்றில் குறித்த போதைப்பொருட்கள் கடத்திச் செல்லப்பட்ட போது சந்தேகநபர் கைதாகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் தற்போது யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this video