முல்லைத்தீவு இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது

Report Print Varunan in சமூகம்

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பினை பேணியமை மற்றும் புலிகளின் மீளுருவாக்கத்துக்கு முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கிளிநொச்சி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு, கேப்பாபுலவு கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய நவரத்தினம் டிலக்சன் எனும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் வானொன்றில் வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குறித்த இளைஞரை கைது செய்து கிளிநொச்சியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை தடுப்பு பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது கைது செய்தமைக்கான காரணம் அடங்கிய சான்றினை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் உறவினர்களிடம் கையளித்துள்ளனர்.

அந்த ஆவணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை மீளுருவாக்கம் செய்வதற்கு உடந்தையாக இருந்தமை என காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.