போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கொழும்பு துறைமுகத்தின் பணியாளர்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பு துறைமுகத்தின் மூன்று பணியாளர்கள் 57 மீற்றர் உயரமான பாரந்தூக்கி ஒன்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் தளத்தில் புதிய பாரந்தூக்கிகளை பொருத்த வேண்டும் என்று கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் ஏற்கனவே மூன்று பாரந்தூக்கிகளை இறக்குமதி செய்து அவற்றை ஜெயா கொள்கலன் இறங்குத்துறையில் செயற்பட வைத்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் தளத்திலும் மூன்று பாரந்தூக்கிகளை பொருத்த வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.