தேசிய சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ள நுவரெலியா

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, இம்முறை வார இறுதி விடுமுறையை கழிப்பதற்காக அதிகளவிலான தேசிய சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவுக்கு சென்றுள்ளனர்.

இதன் காரணமாக நுவரெலியா நகரில் உள்ள அனைத்து ஹொட்டல்கள் மற்றும் தங்குமிட விடுதிகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து முற்றாக நீங்கியுள்ளதாக சுகாதார துறையினர் உத்தியோகபூர்வமாக அறிவிக்காத சூழ்நிலையில், சுற்றுலா சென்றுள்ள தேசிய சுற்றுலாப் பயணிகளில் பலர் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாமல் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.