புலிகளின் ஆட்சேர்ப்பை விசாரிக்க வேண்டும் என ஜெனீவாவில் சுமந்திரன் கூறுவார்..

Report Print Theesan in சமூகம்

மீண்டும் சுமந்திரனை ஜெனீவாவுக்கு அனுப்பினால், தமிழர்களின் குற்றத்தையும், புலிகளின் ஆட்சேர்ப்பையும் விசாரிக்க வேண்டும் என்று சொல்வார் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடவியலாளரக்ள் சந்திப்பின்போதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜெனீவாவில், இனப்படுகொலையை நிரூபிக்கக்கூடிய சட்டத்தரணிகளே எங்களுக்குத் தேவை,மாறாக, தமிழரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது போர் குற்றத்தை சாட்டும் சுமந்திரன் போன்றோர் தேவையில்லை.

எமது போராட்டம் இன்றுடன் 1234ஆவது நாள்களை அடைகின்றது. காணாமல் போன தமிழர்களைக் கண்டுபிடிப்பதற்கும், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை எங்கள் தாய்நாட்டிற்கு அழைக்கிறோம்.

சிங்களவரின் அடக்குமுறைக் கொள்கையின் காரணமாக, தமிழர்களான நாம் சுதந்திரத்தை இழந்து, சிறைச்சாலைகளில் விசாரணைகள் இல்லாமல் பல ஆண்டுகளாக இருக்கிறோம்.

தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் வைத்திருப்பதில் எந்த அர்த்தமுமில்லை. எனவே ஆகஸ்ட்5ம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். 11 ஆண்டுகள் கூட்டமைப்பைப்புக்கு கொடுத்தோம்.

புதிய அரசியலமைப்பின் பெயரில் அல்லது அடிமை சாசனம் என்ற பெயரில், சம்பந்தனும் சுமந்திரனும் எங்களை ஏமாற்றினார்கள். தமிழர்களுக்கு எந்தவொரு அரசியல் உரிமைகளையும் இலங்கை தராது என்பது கடந்த 70 ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டது.

தமிழர்களிடமோ அல்லது, காணாமல் போன மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பங்களிடம் கேட்காமல் சுமந்திரன் இரண்டு முறை சர்வதேச விசாரணையை ஜெனீவாவில் நிராகரித்திருந்தார்.

மார்ச் 2021 இல் எங்களுக்கு மீண்டும் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்க மற்றொரு வாய்ப்பு உள்ளது . எங்களை பிரதிநிதித்துவப்படுத்த சரியான வக்கீல்கள் எங்களிடம் உள்ளனர். தமிழ் இனப்படுகொலையை வெளிப்படுத்தும் அவர்கள் சிங்கள இராணுவத்தை விசாரித்து விவாதிக்க கூடியவர்களும் , மன வைரமும், தைரியமும் உள்ளவர்கள் எங்களிடம் உள்ளார்கள். இவர்களை நாம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்க வேண்டும்.

மீண்டும் சுமந்திரனை ஜெனீவாவுக்கு அனுப்பினால், தமிழர்களின் குற்றத்தையும் விசாரிக்க வேண்டும் என்பார். தமிழ் ஈழ விடுதலை புலிகளின் ஆட் சேர்ப்பினையும் விசாரிக்க வேண்டும் என்பார்.

முஸ்லீம்களை பாதுகாக்க இடம் பெயர்ச்ச்சி செய்தது ஒரு இன சுத்திகரிப்பு என்றும் அதனை விசாரிக்க வேண்டும் என்று கூட சொல்வார். தமிழர்கள் பாதுகாப்பாக இடம்பெயர்ந்ததையும் ஒரு இன சுத்திகரிப்பு என்று விசாரிக்க வேண்டும் என்பார்.

எனவே ஜெனீவாவுக்கு நாங்கள் ஒரு புதிய வழக்கறிஞர் குழுவை அனுப்ப வேண்டும். இந்த அணிகளை ஆகஸ்ட் 5 இல் தமிழர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு தான் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம் ஜெனீவாவில் உள்ளது. இந்த அதிகாரத்தை தான் சுமந்திரனும் கூட்டணியும் கடந்த 11 வருடங்களாக போட்டு உடைத்தது.

அப்போது சிங்களம் தன்பாட்டிலே பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் ,நாம் கூட்டாட்சி அல்ல, தமிழ் ஈழமே தருவோம் என்பார்கள். தங்கள் தலைவர்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்காக நிச்சயம் வருவார்கள். இது தான் கொசோவோ, கிழக்கு திமோர், தென் சூடான், மோண்டினீக்ரோ போன்ற பல நாடுகளில் நடந்தது.

இதேவேளை சிறீதரனின் மைத்துனருக்கும் சிறீதரனின் மனைவிக்கும் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் இரத்தம் தான் ஓடுகிறது, ஆனால் சிறீதரனுக்கு சுமந்திரன் மற்றும் கதிர்காமரின் ரத்தம் ஓடுகிறது . இந்த சிறிய பையன் ஸ்ரீ தரனை தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டும் அவர், எந்த ஒரு சதத்துக்கும் பெறுமதியற்றவர், இவர் எனிமேல் ஒரு நிமிடம் கூட தமிழரை பிரதிநிதிப்படுத்த தகுதியற்றவர் என குறிப்பிட்டுள்ளனர்.