பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கையர்களுக்கு அனுமதி வழங்காமைக்கான காரணம்

Report Print Steephen Steephen in சமூகம்

வெளிநாடுகளில் இருந்து வருவோர் மற்றும் கடற்படையினருக்குள் மாத்திரமே இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுகிறது என இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பிரச்சார வேலைத்திட்டத்தை இலங்கை மக்கள் ஏற்றுக்கொண்டாலும் அதனை உலகில் உள்ள ஏனைய நாடுகள் நம்பாத நிலைமை உருவாகியுள்ளது.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உலகில் உள்ள ஏனைய சிறிய நாடுகளை சேர்ந்த மக்களுக்கு தமது நாடுகளுக்குள் வர அனுமதி வழங்கியுள்ள நிலையில், இலங்கையர்களுக்கு அந்த அனுமதியை வழங்கவில்லை.

இலங்கைக்குள் சாதாரண சமூக மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று சம்பந்தமான பரிசோதனைகளை நடத்தாமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

சாதாரண சமூக மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைகளை நடத்துவதில்லை என்பதால், சமூகத்தில் இருந்து கொரோனா நோயாளிகளை எந்த வகையிலும் அடையாளம் காண முடியாது என கொழும்பில் உள்ள பல வெளிநாடுகளின் தூதரகங்கள் தமது நாடுகளுக்கு அறிவித்துள்ளன.

பொதுத்தேர்தல் நடந்து முடியும் வரை இலங்கை அரசாங்கம் சாதாரண சமூக மக்கள் மத்தியில் PCR பரிசோதனைகளை நடத்தாது என இந்நாடுகள் கருதுகின்றன.

எது எப்படி இருந்த போதிலும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்த பிரச்சாரத்தை நாட்டு மக்கள் தீவிரமாக நம்புகின்றனர். இதனால், மக்கள் முகக்கவசங்களை கூட அணியாமல் வெளியில் சமூகத்தில் நடமாட ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே அரசாங்கத்திற்கு தேவை இருக்குமாயின் வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களை சில விமானங்களை பயன்படுத்தி தினமும் நாட்டுக்கு அழைத்து வர முடியும் என்ற போதிலும் அரசாங்கம் ஏன் அப்படி செய்யவில்லை என்பது தமக்கு கேள்வியாக இருப்பதாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.


you may like this...