பாதையை விட்டு விலகி விபத்திற்கு இலக்கான வான்! சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் வான் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்திற்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற வானே குடாகம பகுதியில் வைத்து இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

சம்பவத்தையடுத்து விபத்திற்குள்ளான வானின் சாரதி தலைமறைவாகியுள்ளதாகவும், இது தொடர்பான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மழை காலநிலையால் ஹட்டன் - நுவரெலியா வீதி வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால் சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு ஹட்டன் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.