பொல்கொல்ல நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு!

Report Print Kanmani in சமூகம்

கண்டி - கட்டுகஸ்தொட்ட,பொல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவர்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நவயாலதென்ன பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான ஷாமிலி ஹர்ஷனி ரத்நாயக்க என்ற மாணவியும், 16 வயதான பல்லேதலவின்ன பிரதேசத்தை சேர்ந்த அகில விஜேரத்ன என்ற மாணவனுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று நவயாலதென்ன ரயில் பாலத்தில் இருந்து மகாவெலி ஆற்றில் குதித்துள்ளனர்.

குறித்த இருவரும் 10 மற்றும் 11ஆம் வகுப்புக்களில் கல்வி கற்று வருவதுடன் காதல் விவகாரம் தொடர்பாக இந்த தற்கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.