தேடப்பட்ட பொலிஸ் அதிகாரி சரணடைந்துள்ளார்

Report Print Steephen Steephen in சமூகம்

போதைப் பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் சமன் வசந்தகுமார பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

தலைமறைவாகி இருந்த நிலையில் தேடப்பட்டு வந்த இந்த சந்தேக நபர் இன்று காலை கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

தலைமறைவாகி இருந்த இந்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரி, அவரது புகைப்படத்தையும் விளம்பரப்படுத்தி இருந்தனர்.


you may like this video