கட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானத்தில் தாய், மகள் உட்பட 7 சடலங்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

சவுதி அரேபியாவில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களின் சடலங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விமான நிலைய சுகாதார பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் களினி, பியகம வீதியில், விகாரை அருகில் உள்ள பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். குறித்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களாகும்.

இந்த மூவரும் ஆயுதங்களினால் தாக்கி பின்னர் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சடலங்களுடன் காணப்பட்ட ஆவணங்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 59 வயதுடைய தந்தையும், 55 வயதுடைய தாயும் 34 வயதுடைய மகளுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் சடலம் இன்று காலை சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் மேலும் 4 சடலங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்கமைய அந்த விமானத்தில் 7 சடலங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏனைய நால்வரும் வேறு இயற்கை காரணங்களால் உயிரிழந்தவர்கள் என விமான நிலைய சுகாதார வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த 3 சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.


you may like this video