ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: 38 விசாரணை அறிக்கைகளை திருப்பி அனுப்பிய சட்டமா அதிபர்

Report Print Ajith Ajith in சமூகம்

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பில் முடிவுறுத்தப்படவில்லை என்று கூறப்படும் 38 ஆவணக்கோவைகளை சட்ட மா அதிபர் மீண்டும் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தொடர்புடையவர்களாக கருதப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் ஆவணங்களை திருப்பியனுப்பப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஜூன் 26ஆம் திகதியும் சட்டமா அதிபரால் 40 ஆவணங்கள் முடிவுறுத்தப்படவில்லை என்றுக்கூறி பதில் பொலிஸ் மா அதிபருக்கு திருப்பியனுப்பப்பட்டன.

இந்தநிலையில் குறித்த விசாரணை ஆவணங்களை முழுமைப்படுத்தி அனுப்புமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.