கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 18 மாடுகள் உயிரிழப்பு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - பரந்தன் ஏ35 வீதியின் வெலிக்கண்டல் சந்தி பகுதியில் இன்று அதிகாலை வாகனமொன்றில் மோதி 18 மாடுகள் உயிரிழந்துள்ளன.

விசுவமடு பகுதியில் இருந்து 35 வீதியூடாக வேகமாக வந்த டிப்பர் வாகனமே இவ்வாறு மாடுகளை மோதியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தையடுத்து டிப்பர் வாகனம் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கால்நடை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பயிர்ச்செய்கைக்கு உட்படாத பகுதியான வெலிக்கண்டல் பகுதியில் வைத்து பராமரித்து வருகின்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.