மத்திய கிழக்கில் கொரோனாவால் உயிரிழந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்வு

Report Print Ajith Ajith in சமூகம்

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தொற்றினால் இதுவரை இரண்டு பெண்கள் உட்பட்ட உயிரிழந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.

கடந்த மூன்று வாரக்காலப்பகுதியில் மேலும் 12பேர் உயிரிழந்தநிலையிலேயே எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் 19ம் திகதிவரை மத்திய கிழக்கில் கொரோனாவினால் உயிரிழந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 23ஆக இருந்தது.

சவூதி அரேபியா, குவைத், கட்டார், ஓமான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்த இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை கோரோனா பரவலுக்கு பின்னர் மத்தியகிழக்கில் பணியாற்றிய சுமார் 50 ஆயிரம் இலங்கை பணியாளர்கள் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.