கொரோனா தொற்று - விடுமுறையில் சென்ற ஆலோசகர்கள் மீள அழைப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா தொற்று பரவலை அடுத்து தற்போது விடுமுறையில் சென்றிருக்கும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் 8 ஆலோசகர்களும் மீண்டும் திருப்பியழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மாரவில புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியுள்ள 56 பேரும், ஒரு பணியாளருக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டது.

எனினும் இவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் தொற்றியிருக்க வாய்ப்பில்லை என்று சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த நிலையத்தில் 450 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் இரண்டாம் அறிக்கை வெளியாகும்போது அந்த நிலையத்தின் கொரோனாதொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.


You may like this video...