சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சட்டத்தரணிகள் சம்மேளனம்

Report Print Ajith Ajith in சமூகம்

தமது உறுப்பினர்களுக்கு சிறைச்சாலைகளில் கைதிகளை சென்று சந்திப்பதில் ஏற்படுத்தப்படும் தடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளன தலைவர் காலிங்க இந்ததிஸ்ஸ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சிறைகளில் உள்ள கைதிகளை சந்திப்பது என்பது சட்டத்தரணிகளுக்கு இருக்கும் தொழில்முறையான உரிமையாகும்.

எனினும் அண்மையில் பூஸா முகாமில் சிறப்பு அதிரடிப்படையினர் சட்டத்தரணிகளை சோதனை செய்துள்ளனர்.

அத்துடன் நாடாளாவிய சிறைச்சாலைகளிலும் சட்டத்தரணிகளுக்கு தொழில் ரீதியான இடையூறு ஏற்படுத்தப்படுவதாக சட்டத்தரணிகள் சம்மேளன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் சோதனைகள் இடம்பெறுவது வரவேற்கத்தக்கது.

எனினும் நீதிமன்றங்களின் சட்டத்தேவைகளுக்காக சிறைச்சாலைகளுக்கு செல்லும் சட்டத்தரணிகளுக்கு தடைகளை ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல என்றும் காலிங்க இன்டதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.