கல்முனையில் கட்டாக்காலிகளின் தொல்லை அதிகரிப்பு: அபராதம் விதிக்க நடவடிக்கை

Report Print Varunan in சமூகம்

கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரித்திருப்பதால், அவற்றைக் கைப்பற்றி, உரிமையாளர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர பிரதேசங்களில் கால்நடைகளின் தொல்லை மீண்டும் அதிகரித்திருப்பதாக மாநகர சபைக்கு கிடைக்கப்பெற்று வருகின்ற முறைப்பாடுகளையடுத்து, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு விடுத்துள்ள அவசர உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், குறித்த கால் நடைகளைக் கட்டுப்படுத்தி, தமது பொறுப்பில் வைத்திருக்குமாறு அவற்றின் உரிமையாளர்களுக்கு பகிரங்க அறிவிப்பு விடுக்கப்படுவதுடன் தவறும் பட்சத்தில், மாநகர சபைகள் கட்டளைகள் சட்டத்தின் 84 இன் கீழ் குறித்த கட்டாக்காலிகள் மாநகர சபையினால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற சட்ட நடவடிக்கை ஊடாக அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக கல்முனை மாநகர முதல்வர் செயலகம் அறிவித்துள்ளது.