ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ரிஷாத்திடம் 10 மணிநேரம் துருவித்துருவி விசாரணை!

Report Print Rakesh in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சுமார் 10 மணி நேர வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவர் இன்று முற்பகல் 10 மணியளவில் அங்கு முன்னிலையான நிலையில் இரவு 8 மணியளவில் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.

இதேவேளை, கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோர் நேற்று உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகியிருந்தனர்.

இன்று முற்பகல் அவர்கள், அங்கு முன்னிலையாகியிருந்த நிலையில் பூஜித ஜயசுந்தர சுமார் 9 மணி நேரத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேறினார். ஹேமசிறி பெனாண்டோ அதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியினார்.