சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சடடமா அதிபர்

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பின் புறநகர் ராஜகிரியவில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவருக்கு பாரிய காயங்களை விளைவித்த குற்றச்சாட்டை முன்வைத்து சட்டமா அதிபர் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்

இந்த குற்றப்பத்திரிகை கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின்போது பாட்டலியின் சாரதியே வாகனத்தை செலுத்தினார் என்று காவல்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினு;ம் பின்னர் குறித்த சாரதி வழங்கிய இரகிய வாக்குமூலத்தின் பின்னரே முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது