கொரோனா தொற்று - யாழில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Report Print Murali Murali in சமூகம்

யாழ்ப்பாணம் – கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வந்த ஒருவருடன் பழகியோரே இவ்வாறு தனிமைப்படுத்தலில் உள்ளனர். முன்னதாக மாநகர சபை பகுதி மற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு கடந்த 4ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்திருந்தார்.

யாழ். மாநகரசபை பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களும் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பமும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களாக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் பெருமளவான கொரோனா நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர.

இதனால் அங்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.