கொரோனா தொற்று குறித்து போலியான செய்தி! இராணுவத்தளபதி விடுத்துள்ள கோரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

நாட்டின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை செயலணியின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர் பிழையான செய்திகளை நம்பவேண்டாம் என்று கோரியுள்ளார்.

இதேவேளை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் மற்றும் சிகிச்சை நிலையம் ஆகியவற்றில் இருந்து தற்போது வீடுகளுக்கு சென்றுள்ள அனைவரையும் மீண்டும் நிலையங்களுக்கு அழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இதில் பெரும்பாலானோர் மீண்டும் திரும்பிவிட்டதாகவும் ஏனையோர் விரைவில் கட்டுக்கெலியாவ நிலையத்துக்கு அனுப்பப்படுவர் என்றும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.