இலங்கையில் கொரோனா தொற்றாளிகள் 2451 ஆக உயர்வு!

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 2451 ஆக உயர்ந்துள்ளது. இன்று மாத்திரம் 296 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.

பொலநறுவை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 283 பேரும், இந்தியாவில் இருந்து வந்திருந்த 9 பேரும், குவைத்தில் இருந்து வந்த மூவரும், பாகிஸ்தானில் இருந்து வந்த ஒருவரும் வெலிக்கடை சிறைச்சாலையில் ஒருவரும் இன்று கண்டறியப்பட்டனர்.

இந்தநிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 460 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1980 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.