கரையை நோக்கி பெருக்கெடுத்த கடல் நீர்: போக்குவரத்தும் பாதிப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு - காலி பிரதான வீதியில் இன்று கடல் நீர் கரையை நோக்கி பெருக்கெடுத்துள்ளதால், வாகன போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது.

காலி பிரதான வீதியில் அம்பாலங்கொடை கஹவ சந்தியில் இருந்து தெல்வத்தை வரையான பகுதி வரை கடல் நீர் கரையை நோக்கி பெருக்கெடுத்துள்ளது.

பிரதான வீதியில் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை கடல் நீர் உட்புகுந்துள்ளது. இதனால், வாகன போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது.

இதனையடுத்து மீட்டியாகொடை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் போக்குவரத்தை நெறிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.