அம்பாறையில் பல மாதங்களுக்கு பின் பிடிபட்ட 5000 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய நெத்தலி மீன்கள்

Report Print Varunan in சமூகம்

அம்பாறையின் கல்முனை கடற்கரை பகுதியில் சுமார் 5000 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய நெத்தலி மீன்கள் கரைவலையில் பிடிபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த கடற்கரையில் அண்மைய நாட்களாக அதிகளவான நெத்தலி மீன்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கையில்,

தற்போது அதிகளவான மீன்கள் பிடிபடக்கூடிய காலமாக இல்லாத போதும் நெத்தலி மீன்கள் அதிகமாக பிடிபடுவதால் விலையும் மிகவும் குறைவாக காணப்படுகின்றது.

கடற்கரையிலேயே கருவாடும் உற்பத்தி செய்யப்படுவதுடன் கல்முனை பகுதியில் இருந்து கொழும்புக்கும் மீன்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அத்துடன் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் பல மாதங்களுக்கு பின் இன்று இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிபட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.