வெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்து வருவதை மட்டுப்படுத்த தீர்மானம்! சவேந்திர சில்வா

Report Print Rakesh in சமூகம்
154Shares

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பின்னர் இதுவரையில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கையின் தற்போதைய நிலைமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் போதியளவு வசதி இல்லை.

அந்த காரணத்தால் இவ்வாறு மட்டுப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.